தலைமை மாற்றம் ஏற்பட்டால் கட்சியில் இணைவேன் – அத்தனாயக்க

திஸ்ஸ அத்தநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மாற்றம் ஏற்பட்டால் தான் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்படுவதாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மாவனெல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு கூறுகையில், “ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும். சஜித் பிரேமதாச அல்லது கரு ஜெயசூரிய போன்றவர்களை கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கவைக்கவேண்டும்.

அந்த பொறுப்புக்கள் அவர்களிடம் வழங்கப்படுமாக இருந்தால், ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் வெற்றிப் பாதையில் செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]