தலைமை பொறுப்பை மஹிந்த ஏற்கக்கூடாது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எந்தவொரு நிலையிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கக்கூடாது என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஏற்கவேண்டும் என்று வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் இதனை சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த உள்ளுராட்சி தேர்தல் ஊடாக மக்கள் தோல்வியடைய செய்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஏற்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இனிவரும் நாட்களில் அழைப்பு விடுக்கப்படும்.

அவ்வாறு அந்த அழைப்பை ஏற்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பொறுப்பை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றால் சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறு கட்சியாக மாத்திரம் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]