தலைதூக்குகிறது முஸ்லிம் விரோதச்செயற்பாடுகள்: குருநாகலையில் பள்ளிவாசல்மீது குண்டு தாக்குதல்

தலைதூக்குகிறது முஸ்லிம் விரோதச்செயற்பாடுகள். குருநாகலையில் பள்ளிவாசல்மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் முஸ்லிம்கள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர்.

குருநாகல் மல்லவப்பிட்டியவில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது நேற்று முன்தினம் அதிகாலையில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தலைதூக்குகிறது

அதிகாலை 3.30 மணியளவில் பள்ளிவாசல் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று வெடித்து, பள்ளிவாசலின் கண்ணாடிகள் நொருங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, எல்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வர்த்தக நிலையம் நேற்றுமுன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சிங்கள பௌத்த அடிப்படைவாத பொது பலசேனா அமைப்பு, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வந்ததால், முரண்பாடுகள் தலைதூக்கியிருந்தன.

இதற்கிடையே, மல்லவப்பிட்டியவில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்கா கண்டித்துள்ளது.

அதேவேளை, குருணாகலை சம்பவம் தொடர்பில் அங்குள்ள பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]