தலைகீழாக கவிழ்ந்த கார்

தலைகீழாக

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் ஒன்று தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – மல்லியப்பூ சந்தியில், இன்று காலை 09.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் கூறினர்.

அதிக வேகமாக சென்று கொண்டிருந்த குறித்த காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாரே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற போது காரில் இருந்த இருவர் காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

கார் வீதிக்கு குறுக்காக கவிழ்ந்த நிலையில் உள்ளதால், அப் பாதையிலான வாகனப் போக்குவரத்து ஒரு வழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]