‘தலவாக்கலை’யில் மோதல்

தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை கதிரேசன் ஆலயத்திற்கு அருகில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின நிகழ்வு இடம்பெற்ற அதேவேளை நுவரெலியாவில் இ.தொ.காவின் மேதினம் இடம்பெற்றது.

இதன்போது ஹட்டன் பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு சென்ற இ.தொ.கா ஆதரவாளர்கள் அடங்கிய பஸ்ஸில் உள்ளவர்கள் கோஷமிட்டதாகவும், இதனை எதிர்த்து த.மு.கூட்டணியின் ஆதரவாளர்கள் சிலர் அவர்களை மறைத்து வாய் தர்க்கத்தில் ஈடுப்பட்டதால் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு கலகம் அடக்கும் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து இரு கட்சியினர்களுக்கிடையில் இடம்பெறவிருந்த பாரிய மோதலை தடுத்து சுமூக நிலைக்கு கொண்டு வந்தனர்.