தலவாக்கலையில் மண்சரிவு அபாயம்: 300 குடும்பங்கள் இடம்பெயர்வு

தலவாக்கலையில் மண்சரிவு அபாயம்: 300 குடும்பங்கள் இடம்பெயர்வு

தலவாக்கலை – கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் இதுவரை இடம்பெயர்ந்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக, நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் இந்த இடம்பெயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள், அருகிலுள்ள ஆலயம், பாடசாலைகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சுமார் 2000 அடி உயரம் கொண்ட மலையிலிருந்தே கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவளை மண்மேடுகளும் சரிந்து விழுவதாக கூறப்படுகின்றது.

எனவே பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால், மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. குறித்த சீரற்ற காலநிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]