தலவாக்கலையில் புகையிரத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை

கொழும்பு, கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே புகையிரதத்தில் பாய்ந்து நபரொருவர்; தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்டகொடை புகையிரத நிலையத்தில் பொடி மெனிக்கே புகையிரதத்தை நிறுத்த முற்பட்ட போது, குறித்த நபர் புகையிரதத்தில் பாய்ந்துள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]