தலயா? தளபதியா? பிரபல காமெடி நடிகரின் பதில்!

தற்போது தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கி வருபவர் யோகி பாபு. இவரை பிடிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம்.

இவர் தற்போது விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் விஜய், அஜித் பற்றி இவர் பேசியுள்ளார். அதில் விஜயும் அஜித்தும் எனக்கு இரு கண்கள் மாதிரி என்றும் இரு கண்களையும் பிரிக்க முடியாதது போல் இவர்கள் இருவரையும் என்னால் பிரித்து பேச முடியாது எனவும் கூறியுள்ளார்.

இவர் சர்க்கார் படத்தைப் பற்றி பேசும் போது. இப்படத்தில் விஜய் சார் வரும் காட்சியில் சில நேரங்களில் அவரை கிண்டல் செய்யும் வசனங்கள் இருப்பதாகவும் அவரிடம் கூறியுள்ளார். இதனை நான் செய்யலாமா எனக் கேட்டபோது விஜய் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை நீங்கள் தைரியமாக கூறலாம் என கூறியுள்ளார்.

தற்போது விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் காமெடி ரோலில் நடித்துள்ளார். அஜித் சார் கிண்டல் செய்யும் வசனங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதனை நான் திரையில் கூறலாமா எனவும் கூறியுள்ளார். அதற்கு அஜித் இது உங்கள் வேலை தைரியமாக நீங்கள் கூறலாம் என கூறியுள்ளார்.

இது பற்றி  யோகி பாபு,  நான் சாதாரண நடிகன் ஆனால் என்னை இருவரும் மதித்து பக்கத்தில் அமர வைத்து பேசியுள்ளனர்,  இவர்கள் இருவரிடமும் பல நற்குணங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]