தற்போதைய ரூபா வீழ்ச்சியை கட்டுப்படுத்த கடந்த அரசாங்கத்திடம் திட்டங்கள் காணப்பட்டது: கோட்டாபய

தற்போதைய ரூபா வீழ்ச்சியை கட்டுப்படுத்த கடந்த அரசாங்கத்திடம் திட்டங்கள் காணப்பட்டது: கோட்டாபய

தற்போது ஏற்பட்டுள்ள ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த கடந்த அரசாங்கத்திடம் ஏற்கனவே சிறந்த திட்டங்கள் காணப்பட்டது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய அரசாங்கத்திடம் அத்தகைய திட்டங்கள் ஏதும் இல்லை எனவும் அவர் சுட்டிகாட்யுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடுவலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில், ‘கடந்த அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட துறைமுகங்கள் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் தம்மிடம் இருந்தது.

இந்நிலையில் தற்போது அந்த அபிவிருத்தி திட்டங்களை நிறுத்தியதன் காரணமாகவே நாடு பாரிய பொருளாதார பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது.

குறிப்பாக அவன்கார்ட் திட்டமானது இந்நாட்டில் இதுவரைகாலமும் இல்லாதிருந்த திட்டமாகும். இத்திட்டத்தின் ஊடாக பாரிய அந்நிய செலாவனியை பெற்றுக்கொள்ளகூடியதாக இருந்தது.

இதனால் கடந்த அரசாங்கத்தினால் பெருமளவானோருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க கூடிய சூழ்நிலை காணப்பட்டது’ என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]