தற்போதைய இந்திய அணி வெளிநாடுகளில் அதிக சாதனைகளை செய்துள்ளது: ரவிசாஸ்திரி

தற்போதைய இந்திய அணி வெளிநாடுகளில் அதிக சாதனைகளை செய்துள்ளது: ரவிசாஸ்திரி

கடந்த காலங்களோடு, ஒப்பிடும்போது தற்போதைய இந்திய அணி குறுகிய காலகட்டத்தில் வெளிநாடுகளில் அதிகளவிலான சாதனைகளை படைத்துள்ளது என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், இந்த டெஸ்டுக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின் நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நேற்றைய பயிற்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில்,

‘எதிரணிக்கு கடும் போட்டி கொடுத்து வெற்றி பெற முயற்சிப்பதே எங்களது நோக்கம். முந்தைய டெஸ்டில் நாங்கள் கடுமையாக போராடினோம். ஆனால் இங்கிலாந்து அணியினர் எங்களை விட சிறப்பாக விளையாடியுள்ளனர்.

எனினும் விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் 9 டெஸ்டுகளில் வெற்றி மற்றும் 3 தொடர்களை கைப்பற்றி உள்ளது.

குறுகிய காலக்கட்டத்தில் வேறு எந்த இந்திய அணியும் கடந்த 15-20 ஆண்டுகளில் இது போன்று சாதனைகளை செய்தது இல்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]