முகப்பு News Local News தற்போதைய அரசாங்கம் பதவி விலகும் காலம் அருகே – மஹிந்த தெரிவிப்பு

தற்போதைய அரசாங்கம் பதவி விலகும் காலம் அருகே – மஹிந்த தெரிவிப்பு

தற்போதைய அரசாங்கம் பதவி விலகும் காலம் நெருங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விஹாரமாதேவி திறந்த வெளியரங்கில் நேற்று இடம்பெற்ற ஜனபல சேனா எனப்படும் மக்கள் படையணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வாழ்கை செலவு அதிகரிப்பு, வறுமை போன்றவற்றிற்கு முகங்கொடுக்க மக்கள் தயாராகியுள்ளனர்.
உண்டியல்களுக்கு வரி அறவிடும் அரசாங்கம் தற்போது சிறிய ரக மகிழூந்துகளுக்கும் வரியை அதிகரித்துள்ளது.
இதுவொரு புதுமையான விடயமல்ல.
நாடு தற்போது சர்வதேசத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
எனவே எந்தவொரு நாடும் அரசாங்கம் விற்பனை செய்யும் எந்தவொரு பொருளையும் கொள்வனவு செய்ய வேண்டும்.
ஏன் எனில் தங்களது அரசாங்க காலப்பகுதியில் அதனை மீள பெறுவோம் என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com