தற்போதுள்ள கள நிலவரப்படி – பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு மகிந்தவா? ரணிலா? முழுவிபரம் உள்ளே

நாட்டிலுள்ள தற்போதைய கள நிலவரத்தின்படி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு 105 பேரின் ஆதரவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு 98 உறுப்பினர்களின் ஆதரவும் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க 113 உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒருவரும் பொது நிலையில் உள்ளனர்.

புதிய அரசாங்கம் அமைந்ததன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் 9 பேர் இணைந்து கொண்டனர். அதில் 7 பேர் ஐ.தே.கட்சியினர். அத்துடன், ஈ.பி.டீ.பி. உறுப்பினர் ஒருவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரும் இவர்களில் உள்ளனர். இவர்களுடன் புதிய அரசாங்கத்துக்கு தற்பொழுதுள்ள மொத்த ஆதரவு தொகை 105 ஆகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]