ஸ்ரீநகரில் முகாம் ஒன்றின் மீது தற்கொலை தாக்குதல்

ஸ்ரீநகரில்

 

 

 

 

 

இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீர் பிராந்தியத்தின் ஸ்ரீநகரில் துணைப்படை முகாம் ஒன்றின்மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது எல்லைப்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்

சம்பவத்தின்போது இரண்டு தாக்குதல்தாரிகளும் கொல்லப்பட்டனர்

இந்த தாக்குதல் இன்று அதிகாலை 4 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் மூன்று பேர் பங்கேற்றார்கள் என்ற கண் கண்டசாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தாக்குதலை அடுத்து ஒரு தீவிரவாதி பிரதேசத்தில் ஒளிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாக்குதல் இடம்பெற்ற இடம், ஸ்ரீநகரின் வானூர்தி தளத்துக்கு வெளிப்புறத்தில் அமைந்துள்ளமையை அடுத்து அங்கு வானூர்தி சேவைகள் இன்று காலையில் நிறுத்தப்பட்டன.

தாக்குதலுக்கான பொறுப்பை ஜெய்ஸ் இ மொஹமட் என்ற இயக்கம் ஏற்றுள்ளது.

எனினும் இதனை ஸ்ரீநகர் காவல்துறையினர் உறுதிசெய்யவில்லை.