தற்கொலைக்கு முயன்ற பெண்ணை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய வீரர் – வீடியோ உள்ளே!

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, தீயணைப்புத்துறை வீரர் ஒருவர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் நன்ஜிங் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர், அதே குடியிருப்பின் 8 வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னலில் ஏறி அமர்ந்துகொண்டார்.

பின் தான் கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனைத்தொடர்ந்து குறித்த தகவல் காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் சென்றது.

இதையடுத்து, அந்த பெண்ணின் வீட்டிற்கு மேல் தளத்தில் உள்ள வீட்டிற்கு தீயணைப்பு வீரர் ஒருவர் சென்றார்.

அந்த வீட்டு ஜன்னல் வழியாக கயிறு கட்டி கீழ் தளத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணின் வீட்டிற்கு இறக்கினர்.

கயிறு மூலம் கீழே இறங்கிய வீரர், ஜன்னலில் அமர்ந்திருந்த அந்த பெண்ணை உதைத்து வீட்டிற்குள் தள்ளி காப்பாற்றினார்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை சீனாவின் தொலைக்காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பேஸ்புக்கில் சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]