தர்பூசணி வாங்குறிங்களா? பெண் தானானு பாத்து வாங்குங்க…

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு தர்பூசணி.

இது உடலில் நீர் வறட்சி உண்டாகாமல் இருக்க உதவும். மேலும், ஆண்கள் இதை அதிகமாக உண்பதற்கு காரணம். பாதி அளவு தர்பூசணி ஒரு வயாகராவிற்கு சமமானது என்பதால் தான். ஆனால், சில சமயங்களில் நாம் அளவு, வெளிப்புற தோல் நிறத்தை வைத்து தர்பூசணி வாங்கி வந்துவிடுவோம்.

வீட்டிற்கு வந்து அறுத்து சாப்பிடும் போது தான் அது சுவையே இல்லாமல் இருப்பதை உணர முடியும். இனிக்காத தர்பூசணி, உப்பில்லாத உணவை போல.

சரி! பிறகு எப்படி ஒரு தர்பூசணி சுவையானது என்பதை சாப்பிடாமல் அறிந்துக் கொள்ள முடியும். அதற்கு 5 வழிகள் இருக்கிறது…

ஆணா? பெண்ணா?

தர்பூசணியில் ஆண், பெண் வகை இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா? இருக்கிறது என்பது தான் உண்மை. ஆண் தர்பூசணிகள் நீளமாக இருக்கும். பெண் தர்பூசணிகள் வட்டமாக அல்லது கொழுத்து / தடித்து இருக்கும். பெண் தர்பூசணி தான் மிகவும் இனிப்பாகவும் இருக்கும்.

அளவு!

தர்பூசணியை வாங்கும் போது பெரும்பாலானோர் செய்யும் தவறு அளவை பார்த்து வாங்குவது. பெரிய தர்பூசணிகள் தேர்வு செய்வது தவறு. பெரிய தர்பூசணிகள் எப்போதும் மிகவும் சுவையாக இருக்காது. சிறியவை தான் கூடுதல் இனிப்பாக இருக்கும்.

வால்!

தர்பூசணியின் நுனி பகுதியை வைத்து அது பழுத்திருக்கிறதா? இல்லையா? என கூறிவிடலாம். நுனி பகுதி பச்சையாக இருப்பதை காட்டிலும், காய்ந்து அல்லது உலர்ந்தது போல இருந்தால், அந்த தர்பூசணி பழுத்திருக்கும் என அறிந்துக் கொள்ளலாம்.

தோள்ப்பட்டை!

எப்படி அதிகமான தேனீக்கள் முகர்ந்த மலர்கள் சுவையானது என அறிய முடியுமோ, அப்படி தான் தர்பூசணியில் பிரவுன் நிறத்தில் இருக்கும் பகுதி கண்டு அறியலாம். தேனீக்கள் அதிகமாக தீண்டி இருந்தால் இந்த பிரவுன் நிறம் அதிகமாக இருக்கும். இதை வைத்து நீங்கள் சுவையான தர்பூசணியை தேர்வு செய்யலாம்.

புள்ளிகள்!

நிலத்தில் வைத்த இடத்தில் வெள்ளை அல்லது மஞ்சள் புள்ளி நீங்கள் காண முடியும். வெள்ளையாக இருந்தால் முழுமையாக பழுக்கவில்லை என அர்த்தம். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது நன்கு பழுத்துள்ளது என அறிந்துக் கொள்ளலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]