தரையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! புகைப்படம் உள்ளே!

இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹகிம்பேட் விமானப்படைத் தளத்தில் இருந்து, பயிற்சிக்காக இந்திய விமானப் படைக்குச் சொந்தமான கிரண் என்ற சிறிய ரக பயிற்சி விமானம் சென்ற போது விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விமானமானது யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள பஹுபேடா என்ற இடத்தை அடைந்தபோது திடீரென தரையில் மோதி வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த விமானி, காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என இந்திய விமானப் படை செய்தித்தொடர்பாளர் அனுபம் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில் விமானம் தீயில் கருகி நொறுங்கிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]