தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய தீர்மானம் – கல்வி அமைச்சர்

கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கொழும்பு நுகேகொட அநுல வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமானது என்ற சுற்றரிக்கையை இரத்து செய்வதற்கான ஆலோசனையை முன்வைத்துள்ளார்.

மேலும் கல்விச் செயலாளருக்கு இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை கூறியுள்ளார்.

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையை மறுசீரமைப்பு செய்வது சம்பந்தமாக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமையவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த குழுவில் கல்வியாளர்கள், சிறுவர் உளவியலாளர்கள் மற்றும் சிறுவர் நோய் சம்பந்தமான விஷேட வைத்தியர்கள் அடங்கிய நிபுணர்கள் உள்ளடங்கியிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]