தரம் ஒன்று மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், சுற்றறிக்கைக்கு அமைவாக, நேர்முக பரீட்சைக்கான குழுவை நியமிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பான ஆலோசனைகள் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், தற்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்ப படிவங்களை பட்டியலிடும் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதற்கட்ட நேர்முக பரீட்சை பூர்த்தி அடையும்.

நேர்முக பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தொடர்பான தற்காலிக பெயர் பட்டியல் செப்டெம்பர் மாதம் 30ஆம்; திகதி பாடசாலைகளில் காட்சிப்படுத்தப்படும் எனவும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]