தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பரீட்சைக்கு தோன்றிய மாணவர்கள் பரீட்சை பெறுபேறுகளை  www.doenest.lk என்ற இணையத்தளத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி நாடு முழுவதிலுமுள்ள அரச பாடசாலைகளில் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றது.

இதில் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]