வேகப்பந்து வீச்சுக்கு தரம்சாலா ஆடுகளம் உதவும் என்பதால் இந்திய வீரர்கள் அச்சத்தில் : மிட்செல் ஜான்சன்

தரம்சாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்பதால் இந்திய அணியினர் நிச்சயம் பதற்றத்தில் இருப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையே கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடக்கும் தரம்சாலா மைதானம், அற்புதமான மைதானமாகும். புற்கள் நிறைந்த ஆடுகளமாக அதை ஒருமுறை மட்டும் பார்த்து இருக்கிறேன். அந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் அனேகமாக மிகுந்த நம்பிக்கையுடனும், இந்திய வீரர்கள் கொஞ்சம் பதற்றமுடனும் (புற்கள் இருந்தால் வேகப்பந்து வீச்சு எடுபடும்) இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் அதீத நம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். ஸ்கோர் போர்டு அதைத்தான் காட்டுகிறது.

ராஞ்சியில் நடந்த 3ஆவது டெஸ்டை சமநிலை செய்தது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். ஆஸ்திரேலிய அணி, தலைவர் ஸ்டீவன் சுமித், துணை தலைவர் டேவிட் வார்னர் ஆகியோரை மட்டும் நம்பி இருக்கவில்லை. அணியில் உள்ள மற்ற வீரர்களும் சிறப்பாக ஆடக்கூடிய திறமை படைத்தவர்கள் என்பதை இந்திய வீரர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள்.

தரம்சாலா ஆடுகளம்

ராஞ்சி டெஸ்டை டிராவில் முடித்தாலும் கூட ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த உத்வேகம் அடைந்திருப்பார்கள். தோல்வியின் பிடியில் இருந்து மீண்டதால் அது அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். முந்தைய காலங்களில் இது போன்ற நிலைமையில் நிலைகுலைந்து தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள். அதனால் தான் அடுத்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]