‘தரமணி’ படத்திற்கு கிடைத்த புதிய கவுரவம்

ராம் இயக்கத்தில் வஸந்த் ரவி – ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றுவரும் `தரமணி’ படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் புதிய கவுரவம் ஒன்று கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் `தரமணி’ படம், கதை அமைப்பாலும், தேர்ந்த நடிப்பாலும்,  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

ரசிகர்களின் தொடர் ஆதரவால், ‘தரமணி’ படத்தின் காட்சி எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களின் வரவேற்பு மட்டுமின்றி வணிகரீதியாகவும் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நடுவே, தரமான படங்களை தவறாமல் பார்த்து அந்த படம் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்தோ போனிலோ மனதார பாராட்டும் வழக்கம் கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தரமணி படக்குழுவையும் போனில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் கூறுகையில், இதுபோன்ற ஒரு வாழும் சாதனையாளரிடமிருந்து அழைப்பு வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. மகிழ்ச்சியான ஆச்சிரியத்தில் போனேன். ‘தரமணி’ ஒரு துணிச்சலான படம் (Bold film) என்று கூறினார். படத்தின் எல்லா அம்சங்களை பற்றியும் விவரமாக பாராட்டினார்.

படத்தின் வணிக வெற்றியை பற்றி ஆர்வமுடன் கேட்டறிந்தார். படத்தின் பெரிய வெற்றியை அவரிடம் கூறிய பொழுது கேட்டு மகிழ்ந்தார். ‘தரமணி’ மூலம் நடிப்பில் காலடி எடுத்துவைத்திருக்கும் எனது நடிப்பையும் எனது கதாபாத்திரத்தையும் பற்றியும் விவரமாக பேசி பாராட்டினார். இது போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகள் மேலும் தரமான படங்களை தயாரிக்க எனக்கும் எனது நிறுவனத்துக்கும் பெரும் ஊக்கமாக உள்ளது” என்று ஜே சதீஷ் குமார் உற்சாகத்துடன் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]