தமிழில் முதல் படத்திலேயே உச்சத்தில் சென்றுவிட்ட டாப் நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளால் மேலும் உச்சத்துக்கு சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வந்த வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் மண்ணைக் கவ்வினார் அந்த டாப் நடிகை.
தமிழ் திரையுலகம் அவரை கைவிட்டாலும் இந்தி திரையுலகம் அவரை அங்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.
இந்தியில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அந்த நடிகை தற்போது ஒரு தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டாப் நடிகை நடிக்கும் அந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளாம். இரண்டு பேரில் டாப் நடிகைக்குத்தான் அதிகமான காட்சிகள் இருக்கிறதாம்.
இதனால், வெகுண்டெழுந்த மற்றொரு நடிகை, டாப் நடிகை தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருப்பதாகவும், அதனால்தான் தயாரிப்பாளர் டாப் நடிகைக்கான காட்சிகளை அதிகமாக வைக்கச் சொன்னதாகவும் தன்னுடைய காட்சிகளை ரொம்பவும் குறைத்துவிட்டதாகவும் ஒரு புகார் ஒன்றை பாலிவுட் வட்டாரத்தில் பரப்பி விட்டிருக்கிறாராம்.
ஆனால், டாப் நடிகையோ இந்த புகார்கள் எல்லாம் ஆதாரமற்றவை என்று மறுத்துள்ளாராம்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]