தயான் ஜெயதிலகவுக்கு மஹிந்த பச்சைக்கொடி

தயான் ஜெயதிலக

ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக கலாநிதி தயான் ஜெயதிலக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பச்சைக்கொடி காண்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஐ.நா மற்றும் பாரிசுக்கான தூதுவராக முன்னர் பணியாற்றிய கலாநிதி தயான் ஜெயதிலகவை ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார்.

கலாநிதி தயான் ஜெயதிலக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவராகவும், அவரது ஆலோசகராகவும் இருப்பதுடன் தற்போதைய அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்து வருபவர்.

அவரை ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது அரசியல் அவதானிகள் மட்டத்தில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, ரஷ்யாவுக்கான தூதுவராக கலாநிதி தயான் ஜெயதிலக பொறுப்பேற்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷவின் ஆசி கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]