தயாசிறி ஜயசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் முன்னிலையாகியுள்ளார்.

அர்ஜுன் அலோசியசிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை ஆகியுள்ளகியுள்ளார்.

முன்னதாக, பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திடமிருந்து 10 இலட்சம் ரூபாய் காசோலை பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் என தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகள் காரணமாக தம்மால் குற்றத் தடுப்புப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த வாரம் முன்னிலையாக முடியவில்லை என, அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]