தம்புள்ள பிரதேசத்தில் பெண்களைப் போல வேடமிட்டு சுற்றியவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

தம்புள்ள பிரதேசத்தில் பெண்களைப் போல வேடமிட்டு சுற்றியவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சனத்குமார எனும் பெயரைகே கொண்ட நபரின் சடலமானது தம்புள்ளையில் வாகன நிறுத்திமிடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தம்புள்ள

இந்நபர் இரவு வேளைகளில் பெண்ணைப் போன்று வேடமிட்டு தம்புள்ள நகரத்தில் சுற்றி வருபவராவார். சடலமாக மீட்கப்பட்ட வேளையிலும் அவர் பெண்ணொருவரைப் போன்றே ஆடை அணிகலன்களை அணிந்திருந்தார்.

இவர் ஏற்கனவே அப்பிரதேச பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவராவார். அதிகாலை 2 மணியளவில் இவரின் சடலத்தைப் பார்த்தவர்களே பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து பலகைத் துண்டொன்றும், குடையொன்றும், கைக்கடிகாரமொன்றும் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.தம்புள்ள

பொலிஸார் கொலை குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]