தம்புள்ளையில் இடம்பெற்ற கோரவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!!

குருநாகல் தம்புள்ளை பிரதான வீதியில் யடிகல்போத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியாகியுள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்றும் லொறி ஒன்றும் மோதி இன்று அதிகாலை இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகளும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்களின் சடலங்கள் தற்போது தம்புள்ளை மற்றும் கலவெல மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]