தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் ஊழியர்கள் போராட்டம்

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் ஊழியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் ஊழியர்கள் இன்று முற்பகல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு வைத்தியசாலையில் நோயாளரை அனுமதிக்க வந்த நபர்களின் ஊடாக வைத்தியசாலை ஊழியர் ஓருவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தாக்குதலுக்கு உள்ளான ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை தவிர்த்து ஏனைய பிரிவுகள் வழமை போல இயங்குவதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சந்தன ஹேரத் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]