மகனுக்காக இயக்குனராகும் தம்பி ராமையா

பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தம்பிராமையா.

thambiramaiah

இவர் கடந்த 4 மாதங்களாக தனது நடிப்பு வேலைகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, தன் மகன் உமாபதி நடிக்கும் “உலகம் விலைக்கு வருது” படத்தை இயக்குகிறார் தம்பி ராமையா.

thambiramaiah

இந்த திரைப்படத்தில் பகத் பாசிலுடன் கதாநாயகியாக நடித்த மிருதுளா முரளி நடிக்கிறார்.

thambiramaiah

இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, YG மகேந்திரன், பவன், நான் கடவுள் ராஜேந்திரன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர்.

thambiramaiah

மேலும் இந்த திரைப்படத்தை தேன்மொழி சுங்குரா தயாரிப்பதுடன், PK வர்மா ஓளிபதிவிலும், தினேஷின் இசையிலும் இந்த திரைப்படம் உருவாகிறது.

thambiramaiah

கடந்த மாதம் 30ம் திகதி புதுக்கோட்டை மாவட்ட மலையக்கோயில் கிராமத்தில் உள்ள மலையக்கோயில் 7ம் நூற்றாண்டின் முருகன் கோயிலில் பூஜையுடன், இந்த படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு முதல் நாள் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

thambiramaiah

இந்த பாடல் காட்சியில் தப்பட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் என நூற்றுக்கணக்கான கிராமியக்கலைஞர்களும் பங்காற்றியுள்ளனர்.

thambiramaiah

இந்த திரைப்படத்தின் பாடல் காட்சி தினேஷ் அவர்களின் நடன வடிவமைப்பில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

thambiramaiah

 

“உலகம் விலைக்கு வருது” திரைப்படத்தின் காட்சிகள் புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

thambiramaiah thambiramaiah thambiramaiah

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]