தம்பியின் மீது கோபத்தில் 16வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு!!

தம்பியை தண்டிக்காததன் காரணத்தினால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதி, நல்லூர் பாடசாலை வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் திஷாந்தினி என்ற 16 வயதுடைய மாணவியே இவ்வாறு தனது வீட்டினில் புடவையொன்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மகிழவெட்டுவான் மகா வித்தியாலயத்தில் தரம் 09இல் குறித்த மாணவி கல்வி கற்றுவருகின்றார்.தொடர்ந்து சம்பவம் தொடர்பில் நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி கடுமையான முன்கோபமுள்ளவர் என்றும், இவர் நேற்றைய தினம் தனது 12 வயதுடைய தம்பியுடன் சண்டையிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தனது தாய், தம்பியை தண்டிக்காததன் காரணத்தினால் இவர் கோபமுற்றிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]