தம்பதிகள் யாரிடமும் கூறாமல் மறைக்கும் 8 இரகசியங்கள்!

இரகசியங்கள் இல்லாத உறவுகளே இல்லை. குறைந்தபட்சம் நமது நண்பர்களில் யாரேனும் ஒருவரிடமாவது அந்த இரகசியத்தை, இரகசிய திட்டங்களை கூறி வைத்திருப்போம். ஆனால், திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் சில இரகசியங்களை யாரிடமும் கூற கூடாது என மூடி மறைப்பார்களாம்.

நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் கூட அப்படி எதை இரகசியமாக பாதுகாப்பீர் என தம்பதிகளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்து சுவாரஸ்யமான பதில்கள் இங்கே…

01

லாட்டரி, பரம்பரை சொத்து, வேறு வழிகளில் ஈட்டிய அல்லது இழந்த பணம் பற்றி யாரிடமும் கூற மாட்டார்களாம்.

02

படுக்கையறை சண்டைகள் பற்றி தோழிகளாக இருந்தாலும் பகிர்ந்துக் கொள்ள மாட்டோம் என மனைவியர் கூறுகின்றனர். வேறு தோழி ஏதேனும் கூறினால் அதற்கான சொல்யூஷன் கூறுவார்களாம்.

தம்பதிகள் யாரிடமும்

03

தாம்பத்தியம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து யாருமே வாய் திறப்பது இல்லை. இது சமூகத்தில் வேறுவிதமாக பார்க்கப்படுவதால் மறைக்கிறோம் என தம்பதிகள் பதில் கூறியுள்ளனர்.


04

கணவன் மனைவி மத்தியில் பகிர்ந்துக் கொள்ளப்படும் எமோஷனலான கருத்து பரிமாற்றங்களை வெளிக் கூறுவதில்லை. இதை கூறுவது அவர்களுக்கு துரோகம் செய்வதற்கு சமம் என்கின்றனர் தம்பதிகள்.

தம்பதிகள் யாரிடமும்

05

தங்கள் உடலில் இருக்கும் தாக்கங்கள், மருத்துவ ரிப்போர்ட்கள் அல்லது தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் சிகிச்சைகள் பற்றி கூறாமல் மறைக்கிறார்கள். இதை ரகசியம் என பாராமல், இது மற்றவர்களை பாதிக்கலாம், மன வருத்தம் உண்டாக்கலாம் என மறைக்கிறார்கள்.

06

எதிர்கால திட்டங்கள் பற்றி அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. ஒருவேளை அது நடக்காமல் கூட போகலாம். அப்படி நடக்காமல் போனால் தேவையற்ற பேச்சுக்கள் எழும் என்பதால் இதை ரகசியமாக பாதுகாக்கின்றனர்.

தம்பதிகள் யாரிடமும்

07 

தங்கள் மத்தியல் இருக்கும் பெரும் கனவுகளை யாரிடமும் கூறுவதில்லை. அவற்றை நிறைவேற்றிய பிறகு கூறுவது நல்லது என தம்பதிகள் கூறுகின்றனர்.

08

ஒருசில தம்பதிகள், நாங்கள் இதை தான் ரகசியமாக வைத்திருக்கிறோம் என உங்களிடம் ஏன் கூற வேண்டும். அது தான் இரகசியம் ஆயிற்றே என பொட்டில் அடித்தது போல நச்சு பதில் அளித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]