தம்பகல்ல முச்சக்கரவண்டி விபத்தில் 44 வயது பெண் பலி!

இன்று காலை காலை புசலகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 44 வயதான தம்பகல்ல உடுமுல்ல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

புசலகந்தவில் இருந்து தம்பகல்ல பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த சாரதியும் மற்றும் ஒருவரும் மொனராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]