தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது, சவாலை நிறைவேற்றினார் விஷால்

தமிழ் ராக்கர்ஸ்

சினிமா துறையினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் சென்னையில் விமான நிலையத்தில்  கைது செய்ய ப்பட்டார்.

புதிய திரைப்படங்கள் திரைக்கு வந்த ஓரிரு நாட்களிலேயே இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவராக நடிகர் விஷால் தேர்வு செய்யப்பட்டதும்  தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது செய்யப்படுவார் என சவால் விட்டார்.தமிழ் ராக்கர்ஸ்

கைது செய்யப்பட்டுள்ள கவுரி ஷங்கர் 3ஆம் நிலை அட்மின் என்று கூறப்படுகிறது, இவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டாம், முதல்நிலை அட்மின்கள் மற்றும் இந்த வலைத்தளத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டால் தான் தமிழ் ராக்கர்ஸ் முழுமையாக ஒழிக்கப்படும் என்று கூறப்படுகிறது.