தமிழ் மொழிதின விழா வெற்றிகரமாக நடைபெற வேண்டும்

நீண்ட ஒரு இடைவேளைக்கு பின்பு யாழ்ப்பானத்தில நடைபெறவுள்ள தேசிய தமிழ் மொழித்தின நிகழ்வுகளை அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகரமான ஒரு நிகழ்வாக மாற்றி அமைக்க வேண்டும். எமது தமிழ் மொழிக்கான ஒரு விழாவாகவும் இதனை நான் கருதுகின்றேன்.அனைவருடைய ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்று கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வட மாகாண கல்வி அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்த கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவருமான வே.இராதாகிருஷ்ணன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலளார் இரவீந்திரன், கல்வி அமைச்சின் தமிழ் மொழி பிரிவின் உதவி பணிப்பாளர் திருமதி சடகோபன்,கல்வி அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ரி.ஸ்ரீசங்கர் வட மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்தகல்வி இராஜாங்க அமைச்சர்,

கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை என்னுடைய இராஜாங்க அமைச்சும் வட மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யப்படுகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14,15 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.இதில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ் மொழித் தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் 375 பேருக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இதன்போது வெற்றிபெற்ற மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும்,தமிழர் சகலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலாச்சார ஊர்வலமும் இந்திய கலைஞர்களின் மேடை நிகழ்வுகளும் இந்திய இலக்கிய சொற்பொழிவாளர்களினதும் எமது நாட்டின் இலக்கிய சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளது.கடந்த வருடம் தேசிய தமிழ் மொழித் தின விழா மலையகத்தின் தலைநகரான கண்டியில் நடைபெற்றதாகவும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]