தமிழ் முற்போக்கு கூட்டணியை பலப்படுத்த அரசியல் உயர்பீடம்

தமிழ் முற்போக்கு கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் அரசியல் உயர்பீடமொன்றை அமைப்பதற்கு மத்தியகுழு அங்கீகாரமளித்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் ஹட்டன், கிருஸ்ணபவான் கலாசார மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.

தமிழ் முற்போக்கு

இதில் கூட்டணியின் இணைத்தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ இராதாகிருஸ்ணன் மற்றும் பொதுச்செயலாளர் அ.லோரன்ஸ் உள்ளிட்ட மத்தியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன், முக்கிய சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]