தமிழ் மாணவன் ஒருவன் வடிவமைத்துள்ள உலகின் மிகச் சிறிய செயற்கைக் கோள்

இந்தியாவைச் சேர்ந்த ஒரு பதின்ம வயது மாணவர் வடிவமைத்துள்ள, உலகின் மிகச்சிறியதெனக் கருதப்படும் செயற்கைக்கோள், வரும் ஜூன் மாதத்தில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, நாசாவின் ஒரு மையத்தில் இருந்து சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்படவுள்ளது.

சமீபத்தில் நாசா இணைந்து நடத்திய ஒருபோட்டியில், ரிஃபாத் ஷாரூக்கின் 64-கிராம் (0.14 பவுண்டு) சாதனம் தேர்வு செய்யப்பட்டு, அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முப்பரிமாண வடிவில் அச்சிடப்பட்ட கார்பன் இழையின் செயல்திறனை நிரூபிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது என்கிறார் 18 வயதான , ரிபாத் ஷாரூக்.
தனது கண்டுபிடிப்பு, சுற்றுவட்டப்பாதையின் கீழ் நான்கு மணிநேரம் வேலை செய்யும் என்று உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ரிபாத் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், இந்த சிறிய செயற்கைக் கோள், விண்வெளியில் ஈர்ப்பு சக்தி குறைவான சுற்றுச் சூழலில் சுமார் 12 நிமிடங்கள் செயல்படும்.தமிழ் மாணவன்
”நாங்கள் இந்த செயற்கைக் கோளை ஆரம்ப நிலையி்லிருந்து வடிவமைத்தோம். இதில் ஒரு புது விதமான கணினி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எட்டு சென்சார்கள் இருக்கும். இந்த சென்சார்கள் புவியின் வேகம், சுழற்சி மற்றும் காந்த சூழலை அளவிடும்,” என்றார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாமின் நினைவாக இந்த செயற்கைக்கோளுக்கு ‘கலாம்சேட்'(KALAM SAT) என்று பெயரிடப்பட்டுள்ளது. அப்துல் கலாம் இந்தியாவின் வானூர்தி அறிவியல் லட்சியங்களுக்கான ஒரு முன்னோடி.
நாசா மற்றும் ஐடூடுல் என்ற ஒரு கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய ‘கியூப்ஸ் இன் ஸ்பேஸ்’ ( Cubes in Space) என்ற போட்டியில் ரிபாத் ஷாரூக்கின் இந்த செயற்கைக் கோள் திட்டம் தேர்வு செய்யப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]