தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் சத்திய பிரமாணம்!

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் வெற்றிபெற்ற 36 உறுப்பினர்களின் சத்தியப்பிரமான நிகழ்வு சனிக்கிழமை (31) மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித பொகொல்லாகம, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ எல் ஏ அசீஸ், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை சலீம், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், கட்சியின் பிரதி தலைவர் க.யோகவேள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட வழிபாடுகளை தொடர்ந்து உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு மாநகரசபை மண்டபத்தில் சத்திப்பிரமாணம் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]