யாழில் ‘தமிழ் மக்கள் பேரவை’யின் கருத்தரங்கு

தமிழ் மக்கள் பேரவை

‘தமிழ் மக்கள் பேரவை’யின் ஒழுங்கமைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

“இடைக்கால அறிக்கை மாயைகளை கட்டுடைத்தல்” என்னும் தலைப்பில் இந்த கருத்தமர்வு நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு ஆரம்பமாகிய இந்த கலந்துரையாடல் மற்றும் கருத்தமர்வில் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவருமான சீ.வி.விக்னேஷ்வரன் தலைமை உரையாற்றினார்.

தொடர்ந்து “வடகிழக்கு தமிழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வதேச சட்டம்” எனும் தலைப்பில் பேராசிரியர் முத்துகுமாரசாமி சொர்ணராஜா (சிங்கப்பூர் தேசிய பல்க லைகழக சட்டத்துறை பேராசிரியர்)
உரையாற்றினர்.

தொடர்ந்து “இடைக்கால அறிக்கை மாயைகளை கட்டுடைத்தல்” என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைகழக சட்டத்துறை விரிவுரை யாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற்றினார்.

தமிழ் மக்கள் பேரவைதமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்கள் பேரவை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]