முகப்பு News Local News தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறான செயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் தயங்குகின்றனர்

தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறான செயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் தயங்குகின்றனர்

தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறான செயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் தயங்குகின்றனர்

தமிழர் பிரதேசங்களின் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த வித தொழிற்சாலைகளையும் அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க கூடாது என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது அதற்கு எதிராக குரல்கொடுக்க தயங்குகின்றனர் என்றும் அவர் கூறினார்

தமிழ் உணவார்கள் அமைப்பினால் விடுக்கப்பட்ட மாவட்டம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை (08) செங்கலடியில் அமைந்துள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – மட்டக்களப்பு பெரியபுல்லுமலையில் காத்தான்குடி நகரசபைத் தலைவர் அஷ்வர் அரபு நாட்டு நிதியைக் கொண்டு இயங்கும் மாஹா என்ற நிறுவனத்தினுடாக போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலையொன்றினை அமைத்து வருகிறார். இந்த தண்ணீர்த் தொழிற்சாலை அப்பிரதேசத்தில் வேண்டாம் என மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள்.

இந்த தொழிற்சாலையை அமைப்பவர் தமிழராகவோ, முஸ்லிமாகவோ, சிங்களவராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இருங்கள் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அந்த பிரதேசத்தில் தண்ணீர் தொழிற்சாலை தேவையில்லை என்பதுதான் எங்களுடைய வாதம்.

குறித்த பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதை கால்நடைப் பண்ணை என ஆரம்பத்தில் காட்டப்பட்டது அதனால் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தண்ணீர் தொழிற்சாலை என்று அறிந்த பின்பே மக்கள் எதிர்பிப்பினை வெளியிட்டனர்.

இந்த விடயத்தை இனவாதமாகச் சித்தரித்து முஸ்லிம் மக்களை திசை திருப்பி தமிழ் மக்களை ஆத்திரமூட்டி தங்களுடைய திட்டத்தினை செயற்படுத்துவதற்கான நகர்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் இன ரீயாக ஒரு போதும் சிந்தித்தது இல்லை. இனவாத்தினை வைத்து பலனை அனுபவிப்பவர்கள் முஸ்லிம்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தேர்தல் காலங்களின் இன நல்லுரவு பற்றி அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் தேசிய கட்சியில் போட்டியிடும் முஸ்லிம்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கிறார்கள் ஆனால் எந்தவொரு முஸ்லிமும் தமிழனுக்கு வாக்களிப்பதில்லை.

எமது மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற நீங்கள் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தண்ணீர்த் தொழிற்சாலையை அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது எந்தவகையில் நியாயமாகும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com