தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டப் பேரணி

தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டப் பேரணி.

தமிழ் மக்களின்

மட்டக்களப்பு கல்குடா தொகுதியிலுள்ள் உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து நேற்று (24) செவ்வாய்கிழமை வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

தமிழ் மக்களின்

வாழைச்சேனை பொது அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வாழைச்சேனை கைலாயப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி பிரதேச செயலகத்தில் முடிவடைந்தது. அங்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உதவித் திட்டமிடல் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

தமிழ் மக்களின்

கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை மூன்றாகப் பிரிக்கப்பட்டு கோளனைப்பற்று செயலகப் பரிவிலுள்ள 12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி கோறளைப்பற்று பிரதேச சபை அமைக்கப்பட வேண்டும்.

கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராமங்களை உள்ளடக்கி கோறளைப்பற்று தெற்கு பிரதேசசபை அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபையினுள் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள வடமுனை, கல்லிச்சை, ஊத்துச்சேனை, வாகனேரி புணாணை ஆகிய கிரமங்கள் புதிதாக அமைக்கப்படும் கோறளைப்பற்று தெற்கு பிரதேசசபையுடன் சேர்க்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின்

அதேபோன்று கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலகபிரிவிலுள்ள பிரிவிலுள்ள கிராமங்களை மாத்திரம் உள்ளடக்கி புதிதாக பிரதேச சபை அமைப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையம் இல்லை, ஆனால் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த எமது கிராமங்களில் எல்லையில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படக் கூடாது. என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் – கடந்த காலத்தில் ஓட்டமாவடி பிரதேச சபையுடன் இணைந்திருந்த ஐந்து தமிழ் கிராமங்களுக்கும் அபிவிருத்தியில் பின்னோக்கி காணப்படுவதுடன், இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் அரசியல் அனாதைகளாக காணப்படுகின்றனர்.

தமிழ் மக்களின்

வடமுனை, கல்லிச்சை, ஊத்துச்சேனை, வாகனேரி, புனாணை ஆகிய கிராமங்கள் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவே புதிதாக அமைக்கப்படவுள்ள கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேசசபையில் குறித்த பிரதேச செயலகப் பரிவிலுள்ள 18 கிராம சேவகர் பிரிவுகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.

அதே போன்று கோறளைப்பற்று பிரதேச பூகோல எல்லையின் அடிப்படையில் பிரதேச சபையின் எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் இதில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட கூடாது என்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]