‘தமிழ் மக்களின் ஒற்றுமை மீளக்கட்டியெழுப்பப்பட வேண்டும்’

தமிழ் மக்கள் மத்தியில் நிலவிவந்த ஒற்றுமை மீளக்கட்டியெழுப்பப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையிலான சிலபல சம்பவங்கள் அண்மைய காலத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், தமிழ் மக்களின் ஒற்றுமை சீர்குழையக்கூடிய நிலைமை தொடருமாயின் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான தமிழ் அரசு கட்சியினருக்கும், தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் இடையில் திருகோணமலையில் உள்ள எதிர்கட்சித் தலைவரின் இல்லத்தில் நேற்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழ் மக்களின் ஒன்றுமை மற்றும் மாகாண சபை தேர்தல் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]