தமிழ் மக்களின் இன்றையநிலையை உணர்ந்து இணைந்து செயலாற்றவும் – யாழ் ஆயர்

யாழ் ஆயர்

தமிழ் மக்களின் இன்றையநிலையை உணர்ந்து இணைந்து செயலாற்றுமாறு தமிழ் மக்கள் பெயரால் கேட்டுக்கொள்வதாக யாழ் ஆயர் மேதகு கலாநிதி ஜெஸ்டின் ஞானப்பிரகாசம் அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேர்தல் இலங்கையின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் மிக நீண்ட காலத்தின் பின்னர் ஓரே நாளில் வன்முறைகள் அற்ற நிலையில் மிக அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது.

தொகுதி வாரித் தேர்தல் முறை 49 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒழிக்கப்பட்டு விகிதாசார கலப்பு முறை தேர்தல் நடைமுறைகளின்படி வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் ஒரு சில இடங்களைத்தவிர கட்சிகள் இணைய வேண்டும் என்ற தேவையையே சுட்டி காட்டி நிற்கின்றன. இதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகும். ஓன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற ஆன்றோர் வாக்கிற்கு ஒப்ப தமிழ் மக்களின் இன்றைய நிலையையும், அவர்களின் அவசிய தேவைகளையும், முன்னுரிமைகளையும் என்பவற்றை கவனத்திற் கொண்டு எல்லா வேறுபாடுகளையும் மறந்து தமிழர்கள் என்ற ரீதியில் இணைந்து செயலாற்றுங்கள் என சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தமிழ் மக்கள் பெயரால் வேண்டிகொள்வதாகவும், அவ்வாறு இணைந்து செயலாற்ற இறைவன் உங்களை என்றும் வழிநடத்துவாராக என்றும் ஆயர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]