தமிழ் நாட்டு அரசியலில் மோடியின் சக்கர வியூகம் Modi tamil nadu

 Modi tamil nadu

சமீபத்தில் பாஜகவிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்த பெண் நிர்வாகி ஒருவர் ஒரு தகவலை முக நூலில் பகிர்ந்திருந்தார்.

ஓ.பி.எஸ் – பா.ஜ.க கூட்டணி வரும் தேர்தலில் அமோக வெற்றிபெறும்…
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்வார்…
எப்படி…

ஓபிஎஸ் ராஜினாமாவை திரும்ப பெறுவார்…
சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்..
அதிமுக உறுப்பினர்கள் பெரும்பாலானோர் (சசிகலா ஆதரவாளர்கள்) எதிர்த்து வாக்களிப்பர்…
ஓ.பி.எஸ் பதவி விலகுவார்…
சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோருவார்… கவர்னர் மறுப்பார்… ஆட்சியைக் கலைக்க பரிந்துரை செய்வார்…
ஆட்சி கலைக்கப்படும்.. தேர்தல் நடைபெறும்..
சரிபாதியாக தொகுதிகளை பிரித்து பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்து ஓ.பி.எஸ் கட்சி போட்டியிடும்.. சசிகலாவின் மீதான வெறுப்பு ஓட்டுகளை பெற்று அந்த கூட்டணி அமோக வெற்றி பெறும்…
ஓ.பி.எஸ் தலைமையில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்கும்… அமித்ஷா- மோடி வியூகம் ….கடைசியில் தமிழகத்திலும் வெற்றி பெறும்…
மோடியா லேடியா என்ற யுத்தத்தில் மோடி வென்றார்…
இதற்கிடையில் ….மோடி அரசின் அழுத்தத்தில் சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும். சசிகலா சிறைக்கு செல்வார்….
பொறுத்திருந்து பாருங்கள்…”