தமிழ் நாட்டில் மீனவர்கள்க்கு கடலுக்கு செல்ல தடை

தமிழ் நாட்டில் 45 நாள் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமுல் நடத்தப்படவுள்ளது.
தமிழ் நாட்டில்

தமிழகத்தில் வங்கால விரிகுடா, மன்னார் வலைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலப்பகுதில் மீன்வளத்தை பெருக்கும் நோக்கத்தில் கன்னியாகுமரி முதல் பழவேற்காடு வரை உள்ள 13 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைக்காலப்பகுதியில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் கடலுக்கு செல்ல முடியாது. மேலும் இந்த காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகளை சீர் செய்து கொள்வார்கள். இந்த தடைக்காலம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை 45 நாட்கள் அமுலில் இருக்கும் இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]