தமிழ் தேசிய கூட்மைப்பின் மேதினக்கூட்டம் அம்பாறை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில்

தமிழ் தேசிய கூட்மைப்பின் மேதினக்கூட்டம் அம்பாறை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் நடைபெற்றது.

மேதினக்கூட்டமானது இன்று உலகலாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது அந்தவகையில் இலங்கையிலும் பல பாகங்களிலும் அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் மேதின கூட்டங்களை நடத்திவருகின்றார்கள்.

 

இம்முறை தமிழத்தேசியக்கூட்டமைப்பின் மேதினக்கூட்டம் அம்பாறை மாவட்டததில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந்நிகழ்விற்கு த.தே.கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும், த.தே.கூட்டமைப்பின் கூட்டுக் கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், கட்சித்தொண்டர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாக சென்று மேதினம் நடைபெறும் மைதானத்தினை வந்தடைந்தது.

இம்முறை தொழிலாளர் தினத்திற்கான தொனிப்பொருள் ”தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம் இலங்கை திருநாட்டில் பாராபட்சம் அகன்று சமத்துவம் சகோதரத்துவம் தோன்றி தொடர உழைத்திடுவோம் தொழிலாளர் தம் வாழ்வு வளம்பெற கைகொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் த.தே.கூட்டமைப்பு தொழிலாளர் தினம் நடைபெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]