தமிழ் தேசிய கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் ஆதரவு வழங்கியிருக்கும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் ஆதரவு வழங்கியிருக்கும்

மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருக்கும் என தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றாமல் ஜனநாயக ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தாலும் ஆதரவு வழங்கியிருப்போம் என்றும் கூறினார்.

கம்பெரலிய திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனினால் முன்மொழியப்பட்ட மட்டக்களப்பு ஐயங்கேணி பாடசாலை வீதி கொங்கிறீட் இடும் பணி ஞாயிற்றுக்கிழமை (23) ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த பல ஆண்டுகாளாக குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் பாடசாலை மாணவர்கள் முதல் பிரதேசவாசிகள் வரை பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கி வந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனின் முன்மொழிவின் அடிப்படையில் வீதியின் ஒரு பகுதி 20 இலட்சம் ரூபா நிதியில் கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படவுள்ளது.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – கடந்த காலத்தில் எமது உறவுகள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது, சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றமை, பல யுவதிகள் விதவையாக்கப்பட்டுள்ள நவைமைகளைன உருவாகிய மஹிந்த ராஜபக்ஷவை நாங்கள் எவ்வாறு ஆதரிப்பது?

அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் 13 பிளஸ் தருவதாக கூறினார் 13 பிளசும் இல்லை 13 மைனசும் இல்லாத நிலமை அவரது ஆட்சிக்காலத்தில் காணப்பட்டது.

எமக்கு பல வாக்குறுதிகளை வழங்கிவிட்டு யுத்தத்தில் வெற்றி பெற்றதும் எல்லாவற்றையும் வென்றுவிட்டோம் என்ற இறுமாப்போடு நடந்துகொண்டதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷவை நம்பமுடியாத சூழல் காணப்பட்டது.

தனது ஆட்சியை காப்பாற்றுவதற்காக விலைகொடுத்து பதவிகளைக் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைளிலும் ஈடுபட்டிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினைப் பொறுத்தவரை பணத்துக்காகவோ பதவிகளுக்காகவோ அடிபணியமாட்டார்கள் என்ற அடிப்படையில் நாங்கள் ஒன்றாக ஜனநாயகத்தின் பக்கம் நின்றோம் ஆனால் ஒருவர் மாத்திரம் தவறிவிட்டார் அது அவரது பக்கமாக சிந்திக்க வேண்டிய விடயம்.

மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருக்கும். அது மாத்திரமின்றி சூழ்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றாமல் ஜனநாயக ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தாலும் ஆதரவு வழங்கியிருப்பபோம்.

இவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் பலமுறை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றியபோதும் அதவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை இந்த சூழ்ச்சிக்காரர்களுக்கு நீதிமன்றம் சரியான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. அந்தவகையில் இவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மக்கள் விடுதலை முன்னணி, போன்ற கட்சிகள் ஒரே அணியில் நின்று நீதியைப் பெற்றுக்கொள்ள உழைத்திருந்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு

வடக்கு கிழக்கு மாணங்களில் அபிவிருத்தி என்கதை சிறிதளவும் அனுபவிக்காத பல பிரதேசங்கள் காணப்படுகின்றன. எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அரசாங்கம் கூடுதலான முக்கியத்துவம் வழங்க வேண்டும். இது தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளோம்.

நீண்ட காலமாக நிலைபெற்றுள்ள அரசியல் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாபணும் விதமாக அரசியல் தீர்வு திட்டத்தினை நாங்கள் விலியுத்தியுள்ளோம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொருத்தமான நீதியினை வழங்குதல், அரசியல் கைதிகளின் விடுதலை ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீளக்கையளித்தல் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்துள்ளது அதில் நாங்கள் வெற்றி காண்போம் என்ற நம்பிககை உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]