தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாத போது வெற்றி பெற்றவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது

தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாத போது வெற்றி பெற்றவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது

தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளுராட்சி மன்றத் போட்டியிடாத போது வெற்றி பெற்றவர்கள் அதே கனவுடன் போட்டியிட வருவார்கள் அவர்களது கனவு ஒருபோதும் பலிக்காது

மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளுராட்சி மன்றத் போட்டியிடாத போது வெற்றி பெற்றவர்கள் அதே கனவுடன் போட்டியிட வருவார்கள் அவர்களது கனவு ஒருபோதும் பலிக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அதிகார சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் திங்கட்கிழமை (01) மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – உள்ளுராட்சித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தகுதியான பலர் விண்ணப்பித்தார்கள். யாரைத் தெரிவு செய்வது என்பது எங்களுக்குப் பிரச்சினையாக இருந்தது.

சில கட்சிகளுக்கு வேட்பாளர்களைப் பிடிப்பதற்காக பொய் பிரசாரம் செய்யப்பட்டது. மனுவில் கையொப்பமிடுவதற்காக வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூட வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வேட்பாளர்களை பிடித்துள்ளார்கள.

கடந்த ஆட்சியில் கப்பம் பெற்று, எமது உறவுகளை காணாமல் ஆக்கப்பட்ட எமது பெண்கள் கற்பை இழக்ககூடிய சந்தப்பங்கள் ஏற்பட்டன பலர் துன்புறுத்தபட்ட சம்பவங்கள் நடைபெற்றன. இந்த நிலைமைக்கு அனுசரணையாக இருந்தவர்கள் எமது மக்கள் முன்னிலையில் வரப்போகிறார்கள். எமது தேசிய பிரச்சனைகளை இழுத்தடித்தவர்களும் வரப்போகிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை கண்டு பயப்படுபவர்கள் எமது கட்சியைப் அதிகம் விமர்சிக்கிறார்கள். எமது வெற்றியை எவ்வாறாவது தடுத்துவிட வேண்டும் என பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.

இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என கூறுகிறார்கள் இடைக்கால அறிக்கையை நிராகரிக்கச் சொல்பவர்களின் கைகளில் என்ன இருக்கு எப்பது அவர்களுக்கே தெரியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரெலோ, புளொட் என்பன இறுதிவரைக்கும் கைகோர்த்து நிற்கின்றார்கள். குழப்பி பிரிந்து சென்றவர்கள் அதற்குரிய தண்டனைகளை அனுபவிக்கும் காலம் நெருங்கிவிட்டது”

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]