தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று  (20) நடைபெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின்இணைத் தலைவரும், வடமாகாண சபை அவைத்தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் யாழ்.இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் , ஈ.சரவணபவன், சித்தார்த்தன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]