தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாநகர முதல்வராக வடமாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாநகர முதல்வராக வடமாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டி

இம்மானுவேல் ஆர்னோல்ட்

யாழ்ப்பாணம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாநகர முதல்வராக வடமாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீடுகள் மற்றும் வேட்பாளர் தெரிவுகளில் தமிழ் தேசியகூட்டமைப்பிற்குள் பாரிய விரிசல் நிலை ஏற்பட்டிருந்தது.

அந்த விரிசல்களின் மத்தியில், யாழ்.மாநகர முதல்வராக வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வித்தியாதரனுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. இருந்தும், வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தான் முதல்வர் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும், அவர் அதனை மறுத்தார்.

இந்நிலையில், யாழ்.மாநகர சபை முதல்வராக போட்டியிடுவதற்கு 5 பேரின் பெயர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த போதும், தற்போது, வடமாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவாகியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட்டிடம் கேட்ட போது, கட்சியின், உயர்மட்ட தலைவரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் சகல விடயங்களும் மாநகர முதல்வராக போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. ஆந்தவகையில், கடந்த 14 ஆம் திகதி வடமாகாண அவைத்தலைவரிடம் இராஜினாமா கடிதத்தினை வழங்கியுள்ளதாகவும், கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் உத்தியோகபூர்வ அறிவித்தலுக்காக காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]