தமிழ் தலைவாஸ் அணி தூதராக கமல் நியமனம்

புரோ கபடி லீக்கின் 5-ஆவது சீசனில் பங்கேற்க உள்ள தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புரோ கபடி போட்டியில் இந்த முறை தமிழகம் உள்ளிட்ட 4 அணிகள் புதிதாக இடம்பெற்று உள்ளன. இதில் தமிழக அணிக்கு தமிழ் தலைவாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கபடி போட்டி வருகின்ற ஜூலை 28-ஆம் திகதி தொடங்க உள்ளது. தமிழக அணியின் உரிமையாளராக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அணியின் பயிற்சியாளராக பாஸ்கரனும், தமிழக அணி கேப்டனாக அஜய்தாகூரும் உள்ளனர்.

இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கமல்ஹாசன் கூறுகையில், ”நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்த கபடி விளையாட்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை தூதராக தேர்ந்தெடுத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

சமீப காலமாக பல்வேறு விமர்சனங்களில் சிக்கி வரும் கமல், தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]