தமிழ் சினிமாவுக்கு வரும் நடிகைகள் ரொம்பவே மாறிவிட்டார்கள்!!!

தமிழ் சினிமாவுக்கு

தமிழ் சினிமாவுக்கு வரும் நடிகைகள் ரொம்பவே மாறிவிட்டார்கள்!!!

தமிழ் திரையுலகுக்கு ஒருநாள் கூத்து எனும் படத்தின் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அண்மையில் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது,

கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்கு வரும் நடிகைகள் ரொம்பவே மாறிவிட்டார்கள் என நினைக்கிறேன். ஓர் படத்தில் நடிக்கும்போதே முழுக்கதையையும் படிப்பதும் மட்டுமில்லாது அவர்களின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதா இல்லையா என பார்க்கிறார்கள்.

அவர்களுக்கு நல்ல கதையம்சமுள்ள படமும், அவர்களின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறதா எனவே பார்க்கிறார்கள். அவர்களோ சம்பளத்தை முக்கியமாக பார்க்கமாட்டார்கள்.
இதுநாள்வரையில் என்னிடம் யாரும் தவறான அல்லது தவறான வி‌ஷயங்களுக்காகவோ அணுகியதில்லை.

நான் தாய்லாந்தில் இரண்டு ஆண்டுகள் தற்காப்புக் கலை படித்துள்ளேன். குத்துச் சண்டை நன்றாகவே தெரியும். அதனால் என்னவோ எனது உடல் எப்போதும் கட்டுக்கோப்பாகவே உள்ளது.

தற்காப்புக் கலை, குத்துச்சண்டை கற்றுக்கொண்டதால் எனக்கு மனக்கட்டுப்பாடு எகொஞ்சம் ஜாஸ்தி. தற்காப்புக் கலையானது `டிக் டிக் டிக்‘ படத்துல நடிக்கும்போது எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]